உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலையே ரூ.20-தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 44 லட்சம். இதை உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம் ஆனால் இது உண்மை. சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா? . இந்த பாட்டில் 24 கேரட் தங்கத்தால் ஆனது. பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவரால் இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டது.
எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பருகினால் அதிக உத்வேகம் கிடைக்கும். மேலும் அதிக சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே இந்த விலைக்கு ஒரு முக்கிய காரணம். மேலும் இதுபோலவே ஜப்பான் நாட்டில் விற்கப்படும் ’கோனா நிகரி’ என்ற தண்ணீர் பட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் பல நன்மைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.








