முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர்… பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில், 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் பில் கிளிண்டன். முன்னாள் அதிபரான அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 75 வயதான அவருக்கு கொரோனா அல்லாத தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப் பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சிகிச்சை பயனளிப்பதாகவும் கிளிண்டனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புவதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

Ezhilarasan

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்!

Gayathri Venkatesan

கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!

Halley karthi