தேசிய ஜூனியர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்து வெளியேறியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, கேரளா உள்ளிட்ட 27 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன.
7வது நாளான இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஹரியானாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டில் ஹரியானா அணி 7க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தமிழ்நாடு அணி தேசிய ஜூனியர் ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது.








