விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” திரைப்படம், கமல், பஹத்பாசில், விஜேய் சேதுபதி என பெரிய, பெரிய நடிகர்களுடன் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் உள்ள தாராவி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் திரைப்படம் கோடை மாதத்தில் (2022) வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.








