தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இருப்பை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை கையாள போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சென்னையில் கூடுதலாக 2 ஆயிரத்து 400 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளிக்கும் வகையில், அண்ணா நகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படவுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். டில்லி, மஹாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலைமை போன்று வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருப்பதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், மக்கள் தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







