அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் சட்டம் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு : கனிமொழி

அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் சட்டம் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கனவு தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில், பொருளாதார வளர்ச்சியில், “தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு” என்ற…

அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் சட்டம் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனவு தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில், பொருளாதார வளர்ச்சியில், “தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு” என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கனிமொழி எம்.பி, ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, உள்ள அதிகாரங்களை பறிக்கும் சூழல்தான் தற்போது உள்ளதாகவும் ஒரு கருத்திற்கு எதிர்க் கருத்தை வைக்க முடியாத சூழலில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இயற்கையை மனிதர்கள் அழித்த காரணத்தால் இயற்கை மனிதர்களை அழிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் கொரோனா போன்ற பெருந்தொற்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது என்றும் கனிமொழி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.