முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுத்துமா ? விஞ்ஞானம் என்ன சொல்கிறது

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மாதவிடாய் சுழச்சி முறையில் மாற்றம் ஏற்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்றும் இது தொடர்பாகத் தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதாகவும், இதனால் மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் சில கருத்துகள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படத் தடுப்பூசி மட்டும் காரணமாக இருக்காது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


நமக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக்குறைவு, உணவு முறையில் மாற்றம், உடல் செயல்பாடு உள்ளிட்டவை மாதவிடாயைப் பாதிக்கும். ஆனால் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்க கொரோனா தடுப்பூசியே முக்கிய காரணமாகக் கருதுவது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது ஏற்படும் காய்ச்சலைப்போல மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் உடல் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட வேண்டியதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப்பற்றிய முழு அறிவைப்பெற மாதவிடாய் சுழற்சியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லா மாதமும் கருப்பையின் உட்புறம் தடிமனாகிறது.

அப்போது ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். மேலும் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியாகும். இந்த கருமுட்டைகள் விந்தணுவுடன் சேர காத்திருக்கும். விந்தணுக்கள் வராவிட்டால் ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து, கருமுட்டைகள் உடையும். இதுவே உதிரமாக வெளியாகும்.

இந்த சுழற்சி ஏற்படுவதற்கு நமது நோய் எதிர்ப்புச் சக்தி ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. கருப்பையின் உள்ளமைப்பு தடிமனாவதற்கும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும் வெவ்வேறு வகையான நோய் எதிர்ப்பு செல்கள் (cells) காரணமாக இருக்கின்றன.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது மாதவிடாய் சுழற்சியில் சிறிது மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இதுதொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மருத்துவ ஆய்வில் பெண்கள் பெரிதாக ஈடுபடுத்தப்படுவதில்லை. இதற்கு மாதவிடாய் ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்று யேல் மருத்துவக் கல்லூரியின் (Yale School of Medicine) மகப்பேறு மருத்துவம் மற்றும் இனப்பெருக்க அறிவியல் துறையின் தலைவர் ஹுக் டெய்லர் கூறுகிறார். முக்கிய மருந்துகள் பற்றிய மருத்துவச் சோதனையில் பெண்கள் ஈடுபடுத்துவதற்கு மாதவிடாயும், கருத்தரிப்பும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஒரு மருந்து, மாதவிடாய் காலத்தில் பெண் உடலில் எப்படிச் செயல்படும் என்ற தெளிவான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வுகளில் பெண்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி முதல் எல்லா மருந்துகளும் பெண்களின் உடலில் எப்படிச் செயல்படும் என்ற தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலா

Web Editor

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடு விவசாயிகளின் வளர்ச்சி – அமைச்சர்

Web Editor

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட 22 வயது மாணவி கைது!

Jayapriya