விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!

சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான…

சீர்காழி அருகே திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து மூன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்தக் கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4 ம் தேதி தொடங்கியது.

விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக
நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி -அம்பாள்
புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு
சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.