திருவாரூர், தியாகராஜர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 60% தேர் சீரமைப்புப் பணி நிறைவடைந்துள்ளது.
திருவாரூர், தியாகராஜர் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ் பெற்ற மிகப்பெரிய ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும் 350 டன் எடையும் கொண்டதாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர். ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் ஆகிய 63 நாயன்மார்களின் புராண சிற்பங்கள், பெரியபுராணம், சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள், தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாக்கத்தில் அழகிய கலை நயத்துடன் வடிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட புராணக் கதைகளை எடுத்துக்கூறும் மரச்சிற்பங்கள் ஆழித்தேரில் இடம் பெற்றுள்ளன.
ஆழித்தேரில் அமைக்க குதிரைகள், துவாரபாலகர் என மிகப் பெரியதாகவும், பிரமண்டமானதாகவும் இருக்கும். இக்கோவிலில் பங்குனி உத்தரிர விழா மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தேர் அலங்கரிக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேரோட்டத்தை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து லட்சகணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தேரோட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.
——-அனகா காளமேகன்