ராகுல் காந்தி எம்பி தவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாகை அருகே கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்
பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட
மீனவர் காங்கிரஸ் சார்பாக கடலில் இறங்கும் போராட்டம் நடைபெற்றது.
நாகையை அடுத்த கல்லார் மீனவர் கிராம கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் அமிர்தராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி கோபாலகிருஷ்ணன் என்பவர் திடீரென போராட்டக் களத்தில் இருந்து கடலில் ஆழத்திற்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
—-ரெ.வீரம்மாதேவி







