புதுச்சேரியில் உள்ள பொதுநல அமைப்புகளுக்கு தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் திராவிட கழகம் மற்றும் அழகர் களம் போன்ற அமைப்புகள் 5, 10, பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு இந்து இயக்கங்களுக்கு எதிராக பேசுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாரதிய ஜனதா கட்சி ஒரு வலுவான கட்சி, வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று எம்.எல்.ஏ-வை மிரட்டிய அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவர், பொதுநல அமைப்புகள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், இவர்களுக்கு சட்டவிரோதமாக பணம் வருவதாக குற்றம் சாட்டிய அவர், புதுச்சேரியில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மிகப்பெரிய கலவரத்தைத் தூண்ட பொது நல அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியினரை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும், சட்டமன்ற
உறுப்பினரை மிரட்டும் தொணியில் பேசிய பொதுநல அமைப்பினர் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றார், தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள லெட்டர் பேட் அமைப்புகளை
உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என சாமிநாதன் தெரிவித்தார்.
பேட்டியின் போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்க துறை
அமைச்சர் சாய் சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார்,
கல்யாணசுந்தரம், ராமலிங்கம், வெங்கடேசன், சிவசங்கரன், ரிச்சர்டு ஆகியோர் உடன்
இருந்தனர்.