நாளை வெளியாகிறது வாரிசு படத்தின் 3-வது பாடல்

வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தற்போது…

வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி  ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான தீ தளபதி பாடலை, டிசம்பர் 4ம் தேதி விஜய்யின் 30 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக படக்குழு வெளியிட்டது.

தீ தளபதி பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று
வருகிறது. சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் வரிகள்
எழுதியுள்ளார். பாடல் பெரிய ஹிட் அடித்தாலும் தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஏற்கனவே வெளியான ரஞ்சிதமே பாடலுக்கும்  ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக
வலைதளங்களில் வலம் வந்த நிலையில், இரண்டாவது பாடலான தீ தளபதி பாடலும்
காப்பியடித்தது தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இட்ஸ் ஃபார் யூ அம்மா’ என்றும், ‘சோல் ஆஃப் வாரிசு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்டிமென்டான பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பாடலை விவேக் வரிகள் எழுதி  கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.