புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா – துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் ஆய்வு!

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி திருவிழா நடைபெறும் முகாம்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த…

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி திருவிழா நடைபெறும் முகாம்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி திருவிழா இன்று முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக 100 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி திருவிழா மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 100 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாவும், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என புதுச்சேரி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி திருவிழா நடைபெறும் முகாம்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் அளவில் சிறப்பான எற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து துறை அதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றி வருவதாகவும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில்நடமாடாமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.