முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் (ஃபுளூ) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகச் சிறியவர், முதல் பெரியவர் வரை அனைவருக்கும்  சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு  வரும் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து காணப்பட்டது.குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரி கல்வித்துறை இயக்குநருக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலை ஏற்று, நாளை 17.09.2022 முதல் வரும் 25.09.2022 ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  கல்வித்துறை அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வரிகள் முக்கியம் பிகிலுலுலு….. கமல் பாட்டுக்கு வக்கீல் நோட்டீஸ்

EZHILARASAN D

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Halley Karthik

நீண்ட நாட்களுக்கு பிறகு 900க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Halley Karthik