முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம்!

திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம்

நேரில் விசாரணை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயிடம் உறுதி அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செய்தி வெளியிட்ட மறுநிமிடம் விசாரணை துவக்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

நேரில் வந்து விசாரணை செய்வதாக கர்ப்பிணி பெண்ணின் தாயிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கர்ப்பிணியின் சம்பவம் குறித்து தலைமைச் செய்தியாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவித்து இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு பகுதியை சேர்ந்த துர்கா(22) பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் வேறு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக பிரசவ வலியுடன் நடந்தே சென்ற காட்சி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

கர்ப்பிணி பெண்ணை பிரசவ வலியுடன் சாலையில் நடக்கவிட்ட அரசு மருத்துவரின் மனிதாபிமானமற்ற செயல் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதுதொடர்பாக செய்தி வெளியான அடுத்த நிமிடமே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் விருது கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”

Gayathri Venkatesan

வந்தே பாரத் விரைவு ரயிலில் பொதுமக்களுடன் பயணித்தார் பிரதமர் மோடி

EZHILARASAN D

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Halley Karthik