ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன்…

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன் மற்றும் பரமசிவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நாங்குநேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

பின்னர், மூன்று பேரும் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் கட்ட பரமசிவன், பரமசிவன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், மணக்கரை ராஜாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் உத்தரவை சரியாக படிக்காத சிறை அதிகாரிகள் கட்ட பரமசிவன், பரமசிவன் மற்றும் மணக்கரை ராஜா ஆகிய மூன்று பேரையும் விடுவித்துள்ளனர்.

மறுநாள் மூன்று பேரும் சிவந்திப்பட்டி காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட சென்றபோது இருவருக்கு மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மணக்கரை ராஜாவை கைது செய்து, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே உத்தரவை சரியாக படிக்காமல் ஜாமீன் கிடைக்காத நபரையும் விடுதலை செய்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.