பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 1909 பேரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதியில் பாம்புகளை அதிகம் சுற்றித் திரியும் நிகழ்வுகள் அதிகரித்துவருகிறது. பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் பகுதியில் சுற்றித் திரியும் பாம்புகளை பிடிக்க தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டங்களில் மட்டும் மதுரை மாவட்டத்தில், சுமார் 1945 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 1909 பேரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.







