இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்…

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, ஓய்வு பெறும் நாளில் விசாரித்த அனைத்து வழக்கு விசாரணைகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசியல் சாசன அமர்வு நடத்தும் விசாரணைகள் அனைத்தும் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்த பொருளாதாரத்தல் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு, சிவசேனா தொடர்பான வழக்கு உள்ளிட்டவற்றின் விசாரணை நேரலை செய்யப்பட்டன. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி வாதிட்டனர். உச்சநீதிமன்ற இணையதளத்தில் அவற்றை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, குஜராத், ஒரிசா, ஜார்க்கண்ட், பாட்னா மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நேரலை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.