முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி-வைகோ எச்சரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டு
வரும் நிலையில் அரசிற்கு அவப் பெயரை உண்டாக்க வேண்டுமென சிலர் இது
போன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தமிழ் இதழியலின் முன்னோடியும், ‘தமிழர் தந்தை’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை  எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மற்றும் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:

பத்திரிக்கை உலகின் ஈடு இணையற்ற புரட்சியாளர். அவரது சிலைக்கு மரியாதை செய்ததில் மகிழ்ச்சி. என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர் இவர். திருக்குறளை சொல்லி முதல் நாள் சட்டசபையை தொடங்கினார். இன்று வரை அது தொடர்ந்து வருகிறது.


தமிழகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசுக்கு சிலர் களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இதுபோன்ற செயலில்
ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற முயற்சி செய்கின்றனர். ஒருபோதும் அதனை அனுமதிக்க கூடாது.

அதுமட்டுமின்றி பெரியார், சிலை அண்ணா சிலை உள்ளிட்டவை மீது வேண்டுமென்றே
இதுபோன்ற தாக்குதலை நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார் வைகோ.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வண்ணமிகு வாணவேடிக்கைகளுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு!

G SaravanaKumar

ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியை தடுத்த ஆசிரியர்

Halley Karthik

7 மாநில இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

G SaravanaKumar