முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு திமுக வலியுறுத்தல்!

இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு, ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை உறுதி செய்யவேண்டும். மேலும் ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

கோரிக்கைக்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

Karthick

சிறுமி பாலியல் வழக்கில் 3 பேருக்கு 20 ஆண்டு சிறை!

Gayathri Venkatesan

மு.க. ஸ்டாலினின் நடிப்பு மக்களிடம் எடுபடாது: முதல்வர் பழனிசாமி!

Karthick