முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சியில் இன்று திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்; லட்சிய பிரகடனத்தை வெளியிடுகிறார் ஸ்டாலின்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழகத்துக்கான லட்சிய பிரகடனத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் வரும் மார்ச் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக தங்களது கட்சிகளுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே திமுகவின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பிலான மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதற்காக சிறுகானூரில் 700 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Karthick

ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Nandhakumar

கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan