கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணி!! வைரல் வீடியோ

கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி…

கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெப்பம் தணிந்து மாலை 6 மணிக்கு பிறகு கடலூர் மக்களுக்கு ஆறுதல் தருவது கடல் காற்று மட்டுமாகவே உள்ளது. மாலை ஆறு மணிக்கு பிறகு கடல் காற்று நகர் முழுவதும் வீசி வரும்
நிலையில், மனிதர்கள் காற்று வாங்க வீடுகளை விட்டு வெளியே செல்கின்றனர்.

அதேபோல் கடலூர் புதுப்பாளையம் சாலையில் தனது சைக்கிளில் நாய் ஒன்றை அமர வைத்துக் கொண்டு ஒருவர் சைக்கிள் ஓட்டி காற்று வாங்க சென்றார். அவருடைய செல்ல நாய் மனிதர்களைப் போல் சாதுவாக சைக்கில் பின்புறம் அமர்ந்து காற்று வாங்கிச் சென்று கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.