நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாததால், செங்கோல் விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்தது -ராகுல்காந்தி

வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாததால், செங்கோல் விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாததால், செங்கோல் விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாடிய அவர், மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து அரசியல் செய்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டதால்தான் பாரத் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதாக கூறினார்.

அதையும் தடுத்து நிறுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், ஆனால், தனது யாத்திரைக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு அளித்ததாகவும் கூறினார். வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத மோடி அரசு, மக்களை திசைதிருப்ப செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்ததாகவும் ராகுல்காந்தி சாடினார்.

உண்மைக்கு மாறான தகவல்களின் அடிப்படையிலேயே செங்கோல் விவகாரத்தை அவர்கள் மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்களைப் போன்றே கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தாக்கப்பட்டது போன்ற பாதுகாப்பற்ற உணர்வில் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.