தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா உணவகத்தில் பரோட்டா சமையத்து செய்தபடியே வாக்கு சேகரித்தார்.
அதிமுக சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம் சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 10 நாட்களாக வீடு வீடாக சென்ற வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் பீர்கன்காரணை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஸ்ரீநிவசாகர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் செல்லும் வழியில் இருந்த உணவகத்துக்கு உள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென பரோட்டா போடுவதற்காக மாவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிமுக தேர்தல் அறிகையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து உணவக ஊழியர்களிடமும், அங்கு வந்த வாடிக்கையாளர்களிடமும் வாக்கு சேகரித்தார்.







