முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

கோலமாவை கொண்டு 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து சகோதரிகள் இருவர் சாதனை படத்துள்ளனர்.இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சேர்ந்தவர்கள் தான் கயல்விழி , வினோதினி. சகோதரிகளான இவர்கள் இருவரும், சிறுவயது முதலே கோலம் போடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருந்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் சமீபத்தில் மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்களை வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை
ஈர்த்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று நாட்டின் 74 -வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி இவர்கள் வீட்டின் முன்பு 30 அடி நீளம், 12 அடி அகலத்தில் மிகப் பிரமாண்டமான தேசிய கொடியை மூன்று வண்ணங்களில் வரைந்து அசத்தியுள்ளனர். சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோல மாவுகளை கொண்டு ஏழு மணி நேரத்தில் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் வண்ணம் தீட்டி தேசியக் கொடியை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் தேசிய கொடி வரைந்ததற்கு அருகிலேயே மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுருத்தும் வகையில் மரம் வளர்ப்போம் மழை பெருவோம் எனும் வாசகத்தையும் எழுதியுள்ளனர். இவர்கள் வரைந்த இந்த தேசிய கொடியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்து சென்றனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரிக்கெட் பயிற்சியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம்

G SaravanaKumar

’எனது கடைசி டி-20 போட்டி சென்னையில்தான்…’-பாராட்டு விழாவில் ’தல’ தோனி நச்!

Halley Karthik

‘அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Arivazhagan Chinnasamy