தூத்துக்குடி விமான நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
நாடுமுழுவதும் குடியசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில் விமான நிலைய இயக்குனர். திரு. P. சிவபிரசாத் தேசியக்கொடி ஏற்றி வைத்து பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இவ்விழாவில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர். திருமதி.உமாதேவி, விமான நிலைய எலக்ட்ரிக்கல் துறையின் துணைப் பொது மேலாளர்.திரு. பிரான்சிஸ் சேவியர். கம்யூனிகேஷன் பிரிவின் உதவி பொது மேலாளர். திரு. பிரிட்டோ மற்றும் விமான நிலைய மேலாளர் திரு. ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
– யாழன்







