முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை: லாவ் அகர்வால்

நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மலைப்பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என தெரிவித்தார்.

நாட்டில் 83 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை முறையாக கடைபிடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றவில்லையெனில், ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்றும், உணவகங்கள், கடைகள் மூடப்படும் மற்றும் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் எனவும் லாவ் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

கேந்திரிய வித்யாலயா தமிழ் ஆசிரியர் விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Nandhakumar

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

எல்.ரேணுகாதேவி