பரமக்குடி அருகே முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா!

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (டிச.14)…

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் குடமுழுக்கு விழா
நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (டிச.14) சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை சித்தி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.  முன்னதாக கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலை மண்டபத்தில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து மகா கணபதி ஹோமம்,  துர்கா ஹோம், சாந்தி ஹோமம்,  பூர்ணாகுதி நடைபெற்று,  கொடிமர மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்களுக்கு கலாகர்சனம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து மரகோபுர சிற்பங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து மஹாபூர்ணாகுதி காண்பிக்கப்பட்டு
சிவாச்சாரியார்கள் கடம் புறப்பாடாகி மரகோபுர சிற்பங்களுக்கு புனித நீர் ஊற்றி
பாலாலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தொடர்ந்து விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் பரமக்குடி சுற்றுவட்டார
பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.