‘ஜிகர்தண்டா’வை காண கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஆர்வம் – உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை காண விரும்புவதாக ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தெரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக…

கார்த்திக் சுப்புராஜ்  இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை காண விரும்புவதாக ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தெரித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும்,  ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூல் அதிகரித்தன. உலகளவில் இப்படம் ரூ.70 கோடி வரை வசூலித்தது.

தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், இயக்குநரான எஸ்.ஜே.சூர்யாவிடம் பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனக்குக் கொடுத்ததாகக் கூறி துப்பாக்கி தோற்றத்தில் இருக்கும் பழைய பிலிம் கேமரா ஒன்றை கொடுக்கிறார். இதைக் கூறும் பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டே நடித்தது போல் விஎஃப்எக்ஸ் செய்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கைக் குறிப்பிட்டு, “இந்தியாவிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற தமிழ் படத்தை எடுத்திருக்கிறோம். நெட்பிளிக்ஸில் இருக்கிறது. படம் முழுக்க உங்கள் பங்களிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அனிமேஷன் காட்சிகளில் உங்களின் இளம் வயதைக் காட்டியிருக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக இப்படத்தைப் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

தற்போது, அந்த கணக்கிலிருந்து பதில் வந்துள்ளது. அதில், “ஹாய். கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் அந்தப் படத்தை (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) பார்ப்பார். நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/RealTheClint/status/1734991509605220408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1734991509605220408%7Ctwgr%5Ede9678beaa8cea4bd63178cc6d06a02ff859f17a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fdec%2F14%2Fjigarthanda-double-x-victory-celebration-4122581.html

இதனைக் கண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படத்தைப் பார்த்து விட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆசிர்வதிக்கப்படவான உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகருக்கு நன்றி “என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/karthiksubbaraj/status/1735163889388524024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1735163889388524024%7Ctwgr%5Ede9678beaa8cea4bd63178cc6d06a02ff859f17a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fdec%2F14%2Fjigarthanda-double-x-victory-celebration-4122581.html

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.