அருண் விஜய்யை பார்த்தால் போலீசுக்கு பொறாமை-பார்த்திபன்

நான் உங்கள் அருண் விஜய்க்காக இங்கு வரவில்லை, அவரது தந்தை விஜய குமாருக்காக இங்கே வந்திருக்கிறேன். நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம்.…

நான் உங்கள் அருண் விஜய்க்காக இங்கு வரவில்லை, அவரது தந்தை விஜய குமாருக்காக இங்கே வந்திருக்கிறேன்.

நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சினம் படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், இயக்குநர் குமரவேல், நடிகர் அருண் விஜய், நடிகை பலக் லால்வானி, இசையமைப்பாளர் சபிர், பாடலாசிரியர் கார்கி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு, இயக்குனர் ஹரி மற்றும் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக அருண் விஜய், இப்படத்தில் தனது சொந்த குரலில் பாடிய பாடலை மேடையில் பாடினார். அதன் பின்னர் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசை வெளியீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் உங்கள் அருண் விஜய்க்காக இங்கு வரவில்லை, அவரது தந்தை விஜய குமாருக்காக இங்கே வந்திருக்கிறேன். அருண் விஜய் தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே இந்த அளவுக்கு அவர் வந்திருக்கிறார். அழகு என்பது விஜயகுமார் குடும்பத்திற்குச் சொந்தமாகி விட்டது. அருண் விஜயும் அழகாக இருக்கிறார். பொதுவாக அருண் விஜய்யை பார்த்தால் போலீசுக்கு எல்லாம் பொறாமையாக இருக்கும். இவ்வளவு அழகான போலீசைப் பார்ப்பது கிடையாது. என்னைப் போன்ற உருவத்தில் தான் பொதுவாக போலீஸ் இருப்பார்கள். அதே சமயம் சபீர் அவரது பெயரைப் போலவே பாடல்களையும் போதையாக இசைத்து உள்ளார்” எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.