எமோஷனல் கலந்த ஆக்ஷ்னுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் அது போன்ற கதைகளைக் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
கோவை கே.ஜி.திரையரங்கில் நடிகர் அருண் விஜய் சினம் படம் புரோமஷனுக்காக திரையரங்கிற்க்கு வந்தார். பிறகு ரசிகர்களுடன் சினம் படம் டீசரை பார்த்தார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய், வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் பிரச்னைகளை மற்றும் கோபத்தை எப்படியெல்லாம் வெளிபடுத்துவது போன்ற திரைப்படம் தான் சினம் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்து படபிடிப்புகளை பல இடங்கள் தொடர கொரோனா தொற்றால் அனுமதி கிடைக்காமல் போய்விட்டது. ஆனாலும் திரைப்பட படபிடிப்புகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என மிகவும் சிரமப்பட்டு அனுமதி வாங்கி கஷ்டப்பட்டுதான் இந்த படத்தைக் எடுத்தோம் என்றும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் என்னை அறிந்தால் படத்தின் “விக்டர்” போன்ற கதாபாத்திரம் உள்ள கதைகள் ஏதும் இன்னும் வரவில்லை. அது போன்ற காதபாத்திரம் வந்தால் நடிப்பேன் என்று கூறினார். மீண்டும் கெளதம் ,வாசுதேவ் ,மேனன் அதுபோன்ற படத்தைக் எடுத்தால் மீண்டும் நடிக்க தயார் எனத்தெரிவித்தார். மேலும் அருண் விஜய், என்றாலே எமோஷனல் கலந்த ஆக்ஷ்னுக்கு திரைப்படம் மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் அது போன்ற கதைகளைக் தேர்ந்தெடுத்து நடிப்பதாக எனவும் தெரிவித்தார்.