1 மணி நேர தூக்கத்தை இழந்தால்… என்ன நடக்கும் தெரியுமா?

“ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும்”  என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை.  ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல்…

“ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும்”  என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை.  ஒரு நாளுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.  நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை.  உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும்,  சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.  சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான்.  சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது.  தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள் : “நான் மனிதப்பிறவியாக இருக்க வாய்ப்பில்லை…” – பிரதமர் நரேந்திர மோடி!

இந்நிலையில்,  தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஹைதராபாத் நரம்பியல் மருத்துவ நிபுணரின் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

“ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும். போதுமான தூக்கம் இல்லை என்றால் தலைவலி,  அதிகரித்த எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://x.com/hyderabaddoctor/status/1792916538908893653?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792916538908893653%7Ctwgr%5Ed27625c4a9c18f45c0a4af358c64bd51f6753c4a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fhyderabad-neurologist-claims-losing-1-hour-of-sleep-could-take-4-days-to-recover-x-reacts-101716349250312.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.