முக்கியச் செய்திகள் தமிழகம்

நேர்மையோடு பிரச்னைகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் – நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ்

உண்மையோடும் நேர்மையோடும் சவாலான பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியின் 54-வது
ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அப்பள்ளியின் முன்னாள்
மாணவியும் நியூஸ் 7 தமிழின் பொறுப்பாசிரியருமான  சுகிதா சாரங்கராஜ்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ
மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வாழ்க்கையில் வெற்றி பெற ஆண்கள் ஒருமுறை நிரூபித்தால் போதும் பெண்கள் அப்படியல்ல இருமுறை நிரூபிக்க வேண்டும் என்றும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்கள் விரும்பும் கல்வியை வழங்க வேண்டும் என்றார்.

அத்துடன், நாம் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற லட்சியம் சரியாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். உண்மையோடும் நேர்மையோடும் சவாலான பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்றும் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

EZHILARASAN D

நகரிலிருந்து கிராமத்திற்கு சென்றால் ரூ.6 லட்சம்; ஜப்பான் அரசின் புதுமை திட்டம்

Jayasheeba

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சி நடைபெறுகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Yuthi