திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் பெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் என்றார்.
பொதுமக்கள் மனுவாக கொடுத்த பிரச்னைகள் அனைத்தும், 100 நாட்களில் தீர்க்கப்படும் என்றும், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறிய ஸ்டாலின், இவை அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் என்றார்.







