தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும்
சென்னை இலக்கிய திருவிழாவில்,”தமிழ் சமூகத்தில் பெண்ணியம்” என்ற தலைப்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மேடையில் அவர் பேசுகையில்,
தமிழ் சமூகத்தில் பெண்களுடைய நிலை என்பது குறித்து நான் இங்கு உரையாற்ற உள்ளேன். வரலாற்றில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படவில்லை. ஒரு காலகட்டங்களில் பல்வேறு அவ்வையார்கள் சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். பெண்கள், வரலாற்றில் அரசு பணிகளில் வைத்து போற்றப்பட்டார்கள். ஆனால் அதே காலகட்டத்தில்தான் பெண்களுக்கு விதவை கோலம் இட்டு இகழ்ந்து வந்தார்கள். அதே சம காலத்தில் கண்ணகியும் ஒரு அரசாணை எதிர்த்து நியாயம் கேட்டார் . தற்போது எதிர்த்து கேள்வி கேட்பவர்களின் நிலை என்ன என்பது குறித்து பத்திரிக்கையாகர்களுக்கு நன்றாக தெரியும்.
சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகபடியாக காணப்பட்டது. நரேந்திர மோடி பீடங்கலில் மட்டுமே பெண்களை ஏற்றி வைத்துள்ளார்.
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும் பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் 2016 ஆம் ஆண்டு வெளியான ரெமோ என்னும் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். பெண்ணின் மீது அதிக அன்பு கொண்டதன் காரணமாகவே பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கும். இது ஒரு தவறான முன்னுதாரணம்.
பெண்ணியம் பேசக்கூடிய பெண்களையே மிரளச்செய்யும் அளவிற்கான கருத்துக்கள் பெரியாரின் கருத்துக்கள். அப்பெரியாரின் வழிவந்த நாம் பெண்களை மதித்து வருகிறோம். பெண்களை நாம் நடத்தக்கூடிய விதம் என்பது சமூக மாற்றத்தின் மூலமாக மட்டுமே நிறைவேறும். அதன்படி சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஒரு மசோதா கொண்டு வந்த பொழுது ஒன்றிய அரசு யாரிடத்திலும் ஆலோசனை கேட்டுப் பெறவில்லை. ஆனால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்ட போது அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்படுவதாக கூறி ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது உரையில் தெரிவித்துள்ளார்.