முக்கியச் செய்திகள் சினிமா

மும்பையில் வீடு தேடும் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா மும்பையில் தங்குவதற்காக புதிய வீடு தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆன மற்ற நடிகைகளைப் போல இல்லாமல், இவர் திருமணத்திற்கு பின்னும் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டையும் தக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தி ஃபேமிலி மேன்- 2 என்னும் இந்தி வெப் சீரீஸில் நடித்தார். இந்த வெப் சீரீஸ் தமிழ்நாட்டு ரசிகர்களிடையே எதிர்ப்பையும், சர்ச்சையையும் கிளப்பினாலும், அவருடைய திறமையான நடிப்பினால் பாலிவுட் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதனால் அவருக்கு தற்போது இந்தியில் வெப் சீரீஸ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வரத்தொடங்கியுள்ளது.

Samantha in The Family Man-2

இதனால் மும்பையில் தங்குவதற்காக நடிகை சமந்தா புதிய வீடு தேடும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே சுருதிஹாசனுக்கு மும்பையில் வீடு உள்ளது அதைப்போல ராஷ்மிகா மந்தனாவும் சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கினார். விரைவில் சமந்தாவும் அங்கு வீடு வாங்க திட்டன் தீட்டி வருகிறார்.

Samantha in Super Deluxe

தற்போது சமந்தா, சகுந்தலம் எனும் புராண படத்தில் சகுந்தலையாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சமந்தா கைவசம் உள்ளது. இதில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாராவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு

Halley karthi

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Saravana Kumar

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை: சீமான்

Ezhilarasan