முடிஞ்சா என்னை புடிச்சு பாரு? காவலருக்கு சவால் விட்டவர் கைது

ராமநாதபுரம் அருகே குடிபோதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதான நுழைவாயில் பகுதியில், குடிபோதையில் வாலிபர் ஒருவர் தனது செல்போனில்…

ராமநாதபுரம் அருகே குடிபோதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதான நுழைவாயில்
பகுதியில், குடிபோதையில் வாலிபர் ஒருவர் தனது செல்போனில் உரக்கச் சத்தம் போட்டுக்கொண்டு அங்குமிங்கும் உலாவிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றும், யாருக்கும் அடங்காமல் அங்கு நின்று குடிபோதையில் உளறி கொண்டுள்ள அந்த நபர் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்து குடி
போதையில் நின்று கூச்சல், குழப்பத்தில் ஈடுப்பட்ட நபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் காவலரை பார்த்து முடிஞ்சா என்னை அடிச்சு பாரு, என்ன புடிச்சு பாரு, என்ன புடிச்சு உள்ள போட முடியுமா உன்னால என்று ஒருமையில் கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த ஒரு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின்படி அந்த வாலிபர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் அந்த நபர் ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம்
பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பதும், ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள
சாக்கடை கழிவு நீர் அடைப்பு எடுக்கும் பணியில் ஆபரேட்டராக தற்காலிக பணியில்
உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது காவ‌ல்துறை‌யின‌ர்
வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.