திமுக, அதிமுகவினரிடம் தங்கத்தையும் கேளுங்கள் – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்

திமுக, அதிமுக கட்சியினர்  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல்  தங்கத்தையும் கேட்டு வாங்குமாறு தேமுதிக மாநிலப் பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்…

திமுக, அதிமுக கட்சியினர்  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல்  தங்கத்தையும் கேட்டு வாங்குமாறு தேமுதிக மாநிலப் பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து
தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கிழக்கு தொகுதிக்குட்பட்ட
வீரப்ப சத்திரம், கருங்கல்பாளையம்.,கேஎஸ் நகர்.,ஆர்கேவி சாலை உள்ளிட்ட
இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் முரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதா
விஜயகாந்த் தெரிவித்ததாவது..

ஈரோடு கிழக்கு தொகுதியில் மிக பிரதான தொழிலாக  நெசவுத்தொழில் மற்றும்
விவசாயம் இருப்பதால் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் தேமுதிகவிற்கு தங்களது
ஆதரவை தெரிவிக்க வேண்டும். ஈரோடு மக்களுக்காக கேப்டன் விஜயகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டார்.

தமிழக அமைச்சர்கள் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் 21 அமைச்சர்களும் இடை தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே இங்கு முகாமிட்டுள்ளனர் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : தமிழ்நாடு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- அண்ணாமலை

இதுவரை எந்த தேர்தலிலும் நிகழாத வகையில் வாக்காளர்களை ஆடு மாடு போன்று
குறிப்பிட்ட இடங்களில் அடைத்து வைத்து அவர்களுக்கு பணம், பிரியாணி
கொடுத்து அடிமையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.  இது வேதனைக்குரிய
செயல் என்கிற நிலையில் மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை
எடுக்கப் போகிறது. இது போன்ற சூழல் தொடர்ந்து நீடித்தால் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்.

திமுக அரசு நூல் விலை கட்டுப்படுத்தவில்லை. அரசு மதுபான கடைகளை அகற்றவில்லை. பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி பொறுப்பில் இருந்த நிலையில் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் தற்போது ஒருவர் ஒருவர் வசைப்பாடி கொண்டு வருகின்றனர்.

இதனையும் படியுங்கள் : அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் ஒரு பாடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல போலத்தான்.  இரண்டு
கட்சிகளும் மிகப்பெரிய ஊழல்வாதிகள். எனவே இந்த முறை  வாக்காளர்கள்  தேமுதிகவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் திமுக அதிமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளாமல் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் தங்கத்தையும் கேட்டு வாங்குங்கள்.

தேமுதிக வெற்றி பெற்றால் ஈரோடு மாநகராட்சி மேன்மை அடைய அனைத்து
அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்.
நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படுத்தப்படும் ” என தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.