கடந்ந 30 ஆண்டுகளாக தைரியமாக இருந்த காவல்துறையின் கைகள் இப்போது கட்டபட்டு உள்ளன என அண்ணாமலை பேசியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசை ஆதரித்து பாஜக மாநில தலைவர் இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். ஈரோட்டில் தற்போது அக்ரஹார வீதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அண்ணாமலை, 27ம் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற போவதில்லை. ஆனால் சட்டபேரவை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டுமானால் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தென்னரசு வெற்றி பெற்றால் முதலமைச்சருக்கு காது கேட்கும். அப்போது தான் வாக்கு உறுதியை நிறைவேற்றுவார்கள்.
இதுவரை 41 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றபட்டு உள்ளன. இதுவரை 30 அமைச்சர்கள் சம்பாதித்த காசை செலவு செய்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியில் 1000 யூனிட் மின்சாரம் தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்போது 80 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் 100 யூனிட் இலவசம் என சொல்கிறார்.
யாருக்கும் எதுவும் செய்யாமல் வாக்கை வாங்கி விடலாம் என நாநினைக்கிறார்கள்.
சொத்து வரி 100-150 சதவீதம் உயர்ந்து உள்ளன. திருமங்கலம் தேர்தலை போல ஏதாவது ஒன்று செய்வார்கள். அமைச்சர்களால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த தேர்தலில் ஜெயித்தால் அரவகுறிச்சி தேர்தல் போல பெயர் வரும்.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்த நிலையில் 22 மாதத்தில் கூட்டு பலாத்காரம் நடத்து உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 9 கொலை நடந்து உள்ளன. காவல் துறைக்கு சவால் விட்டு கொலை நடைபெறுகிறது. கடந்ந 30 ஆண்டுகளாக தைரியமாக இருந்த காவல்துறையின் கைகள் இப்போது கட்டபட்டு உள்ளன என்று பேசினார்.