முக்கியச் செய்திகள் தமிழகம்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். ஆனால் சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவிட்டு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகம்

சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையிலும் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில், எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சருக்கு ஓபிஎஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்

G SaravanaKumar

9 கின்னஸ் சாதனைகளைப் புரிந்த இந்திய தட்டச்சர்!

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

G SaravanaKumar