ஜம்மு விமானப்படை தளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு!

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு என தெரியவந்துள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது கடந்த ஜூன் 27ம் தேதி அதிகாலை ட்ரோன்மூலம்…

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு என தெரியவந்துள்ளது.

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது கடந்த ஜூன் 27ம் தேதி அதிகாலை ட்ரோன்மூலம் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு விமானப்படை வீரர்கள்லேசான காயம்அடைந்தனர். பாகிஸ்தான் ஆதரவுடன் ஜம்மு விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து ஜம்முவில் ட்ரோன் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், வைத்திருப்பதற்கும், பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் ட்ரோன் வைத்திருப்போர் அதனை காவல்நிலையங்களில் ஒப்படைக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. இது தவிர அரசின் சார்பில் வேளாண் ஆய்வு, பேரிடர் மேலாண்மை ஆய்வு, சாலை பணிகள் போன்றவற்றுக்காக ட்ரோன் பயன்படுத்த தடை இல்லை. அதே நேரத்தில் ட்ரோன் பயன்படுத்தும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று ஒருவாரம் கடந்த நிலையில் ட்ரோன் தாக்குதல் குறித்த தடயவியல் ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீனாவின் தயாரிப்பு என தெரியவந்துள்ளது. ட்ரோனில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் ஆர்டிஎக்ஸ் மற்றும் நைட்ரேட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.