துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6ஆக பதிவு

தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6ஆக பதிவாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே…

தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.6ஆக பதிவாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான  அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,73,000 கட்டடங்கள் சேதமைடந்துள்ளன.

இந்நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூட்டர் நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நகரில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.