#ICC ஆகஸ்ட் மாத விருது – சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்ற இலங்கை அணி!

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷிதா மாதவி வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட்…

#ICC August Award - Dunith Vellalaghe, Harshita shortlisted!

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்ஷிதா மாதவி வென்று அசத்தியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது. அதில் வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதையும் படியுங்கள் : #Viral | “ஹே தள்ளு… தள்ளு…தள்ளு…” காமடி சீன் பாணியில் ரயிலை தள்ளிய ரயில்வே ஊழியர்கள்!

இவர்களில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வீராங்கனைகள் பட்டியலில் இலங்கையின் ஹர்ஷிதா மாதவி, அயர்லாந்தின் கேபி லூயிஸ், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.