#Dhoom4 திரைப்படத்தில் இணைந்துள்ளரா நடிகர் சூர்யா ?

தூம் 4 திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி…

Has Suriya joined the cast of #Dhoom4?

தூம் 4 திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ஆக.12 வெளியாகியுள்ளது.

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியில் தூம் 4 திரைப்படத்தில் நடிகர் சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூம், தூம் 2, தூம் 3 ஆகிய படங்களை நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை ஈட்டிய நிலையில் தற்போது தூம் 4 திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். தூமில் ஜான் ஆபிரகாம் , தூம் 2ல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தூம் 3ல் அமீர் கான் வரை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் தூம் 4ல் சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.