11 எம்மி விருதுகளை தட்டிச்சென்ற #TheBear தொடர் – சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் #JeremyAllenWhite!

‘தி பியர்’ என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததற்காக ஜெரிமி ஆலன் ஒயிட்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் இந்த தொடர் 11 விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படங்களுக்கு, உயரிய…

#TheBear series wins 11 Emmys - #JeremyAllenWhite wins Best Actor!

‘தி பியர்’ என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததற்காக ஜெரிமி ஆலன் ஒயிட்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் இந்த தொடர் 11 விருதுகளை அள்ளியது.

சிறந்த திரைப்படங்களுக்கு, உயரிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுவதுபோல தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மிக உயரிய விருதான ‘எம்மி விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ‘தி பியர்’ என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததற்காக ஜெரிமி ஆலன் ஒயிட்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் இந்த தொடர் 11 விருதுகளை அள்ளியது. கடந்த ஆண்டு எம்மி விருது வழங்கும் விழாவில் இந்த தொடர் 10 விருதுகள் வென்றது. தற்போது தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளது இந்த தொடர்.

அதேபோல், ‘ஹேக்ஸ்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜீன் ஸ்மார்ட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இவை தவிர சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சி, சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.