அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வி.கே.சசிகலா சென்றார். அங்கு சுவாமி, அம்பாள், புதன், அகோரமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சட்டப் பேரவையில் ஓபிஎஸ், இபிஎஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேள்விக்கு, மக்களால் தேர்வு செய்தவர் ஒரு தீர்மானம் கொண்டு வரும் போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னை என்பதால் ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை.அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன். எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும், அதிமுக எம்ஜிஆர் போட்ட விதை. அதனை வளர்த்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் என தெரிவித்தார்.