தமிழகம் செய்திகள்

திருப்பூரில் சர்வதேச நிட்பேர் கண்காட்சி-புதிய ரக ஆடைகள் அறிமுகம்!

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர்
கண்காட்சியை முன்னிட்டு புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் கண்காட்சி
வளாகத்தில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர்
கண்காட்சி தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் கோடை , குளிர் கால ஆடைகள் கண்காட்சியில் குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள் , பசுமை தரக்கூடிய மூங்கில் மூலம் தயாரிக்கும் பேபி கேரிங் ரக ஆடைகள் , விளையாட்டு ஆடைகள், மறு சுழற்சி முறையில் ஆடை தயாரிக்கும் போது விழுகின்ற கட்டிங் வேஸ்ட், பிளாஸ்டிக் பெட் பாட்டில்ஸ் மூலம் நூல் உற்பத்தி செய்து தொடர்ந்து டி. சர்ட், குழந்தைகள் ஆடைகள் தயாரித்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

கண்காட்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில்
தயாரிக்கப்பட்ட புதிய ரக ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையிலான பேஷன் ஷோ
நிகழ்ச்சி நடைபெற்றது.

—ரெ.வீரம்மாதேவி

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் நடப்பு ஆண்டிலேயே நிறைவு பெறும்: அமைச்சர் முத்துசாமி

Web Editor

துரோகத்தால் இபிஎஸ் வீழ்த்தப்படுவார்- டிடிவி தினகரன்

Jayasheeba

‘கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திற்கும் சளைத்தது அல்ல தமிழ்நாடு’ – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy