“நானே வந்து வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறேன்” | திமுக தொண்டர்களுக்கு #Deputy CM உதயநிதி வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், கட்சித் தொண்டர்கள் தன்னை சந்திக்க சென்னைக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறும், தானே நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

“I will personally meet and receive greetings” - #Deputy CM Udayanidhi's request!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், கட்சித் தொண்டர்கள் தன்னை சந்திக்க சென்னைக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறும், தானே நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கட்சியின் தலைவர் – முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கட்சிப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதை உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். நன்றி”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.