நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என நியூஸ்7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் வெளியான ”குட்டிப்புலி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் தற்போது இயக்கி வரும் படம் தான் குலசாமி. இப்படத்தில் கதாநாயகனாக விமல், கதாநாயகியாக தன்யா ஹோப் மற்றும் வில்லனாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜனனி பாலு நடித்துள்ளார். சமீபத்தில் குலசாமி படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
குலசாமி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையிடலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி கதாப்பாதிரத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நடித்துள்ளார். ஏப்ரல் 21ம் தேதி அன்று குலசாமி படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் பவாரியா கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பதும், முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டின் கதைதான் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் படமாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் டிஜிபி ஜாங்கிட் நியூஸ்7 தமிழின் சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என சினிமேக்ஸ் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி ஜாங்கிட் பங்கேற்ற சினிமேக்ஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5.30 மணிக்கு நியூஸ் 7 தமிழில் ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :









