தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றத்தை ஏற்றுக்கொள்வேன் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்
டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ,
காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள்
கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற ” கையோடு கைக்கோருங்கள்” நிகழ்வின் மூலம் , அனைத்து மாநிலத்திலும் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமத்திலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயண விவரங்கள், மோடி அரசின் தோல்விகள் , பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள் குறித்த துண்டு பிரசரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.
அனைத்து கிராமத்திலும் காங்கிரஸ் கொடியை ஏற்றுவது தான் காங்கிரஸின் பிரதான
செயல்திட்டம். ஏற்கனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு , 100 காங்கிரஸ் கொடிகளை
ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து
மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை இன்றைய கூட்டத்தில்
தெரிவித்தனர்.
கமலஹாசன், கூட்டணிக்கான அச்சாரத்தின் அடிப்படையில் ராகுல் காந்தியின்
நடைபயணத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. கமல்ஹாசன் மதசார்பற்ற கொள்கை உடையவர், நல்ல சிந்தனையாளர். எனவே ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில்
கமலஹாசன் பங்கேற்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ்
வரவேற்பதாக கூறினார்.
இதனைதொடர்ந்து தமிழக கங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்த
கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, அனைத்து பொறுப்புகளும்
மாற்றத்துக்குரியது தான் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை
மாற்றினால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வோம். அனைவரின் கடமை கட்சி பணி செய்வதே என கூறினார்.